அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது நாளைய தினம் (03) நடைபெறவுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் 9 கோடிப் பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Donald Trump
இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் (Joe Biden) களமிறங்கியுள்ளனர்.
இந் நிலையில் கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடனைவிட ட்ரம்ப் பின்தங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இன்று வரை 9 கோடிப் பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். இவர்கள் அஞ்சலிலும், வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்றும் வாக்களித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 65 சதவீதமாகும்.