கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் நேற்று (01) யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை மரத்தை நட்டு வைத்து கார்த்திகை மாதம் மரநடுகையை இயக்கத்தின் செயலாளர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்தார்.
இம்முறை வீடுவீடாகச் சென்று மரங்களை வழங்க உள்ளதாகவும் சரியான முறையில் வளர்க்கப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் அவ்வாறு சரியான முறையில் பராமரித்து வளர்த்து விடுபவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடுகை மாதத்தின் இறுதியில் இடம்பெறும் என்றும், இதன் போது தமிழ் தேசிய பசுமை பசுமை இயக்கத்தின் செயலாளர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.