ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவல கத்தில் இடம்பெற்றபோது அவ்வைபவத் துக்கு மஹிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு கௌர விக்கப்பட்டமை குறித்து அமெரிக்காவின் நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது 2009ஆம் ஆண்டு ஏராளமான உயிரிழப்புகள், சரணடைந்தோர் காணாமலாக்கப்பட்டமை மற்றும் மக்களது காணிகள் வடக்கு – கிழக்கில் அபகரிக்கப் பட்டமை போன்ற நடவடிக்கைகளாக, பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போது ஜனாதிபதியாக இருந்தவரே இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
எனவே, இத்தகைய ஒருவர் உலகில் சமாதானம், சகவாழ்வு போன்றவற்றின் சின்னமாக விளங் கும் ஐ.நா ஸ்தாபனத்தினால் எவ்வாறு அதன் ஆண்டு விழா வைபவத்துக்கு பிரதம விருந்தின ராக அழைக்கப்படடிருந்தார் என்று கேள்வியை எழுப்பியே மனித உரிமைகள் கண்காணிப் பகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
75ஆவது ஆண்டு விழா கடந்த 23ஆம் திகதி கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஐ.நா ஸ்தாபனத்தின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாடப் பட்டிருந்தது. அவ்வைபவத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச இலங்கையில் ஐ.நாவின் பணிகளுக்கு தமது அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்குமெனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், உலகில் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படுவதை அவதானிப்பதுடன் அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ. நா. விழாவுக்கு இலங்கைப் பிரதமர் ராஜபக்ச அழைக்கப் பட்டமை தவறு எனச் சுட்டிக்காட்டியிருப்பதோடு, மஹிந்த ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்புச்செயலாளராகவுமிருந்தே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மிகவும் தெளிவான முறையில், எத்தகைய ஒளிவு மறைவுமின்றி மனித உரிமைகள் கண் காணிப்பகம் தனது கண்டனத்தை வெளியிட்டிருப்பது வடக்கு – கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதலைத்தருவதாகவே இருக்கின்றது.
ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், யுத்த குற்றவாளிகள் சர்வதேச நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த கால மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் யுத்தம் இடம்பெற்றபோது மட்டுமல்ல, யுத்தத்துக் குப் பின்னரும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, இன்றுவரை அவர்களில் சிலர் காணாமலாக்கப்பட்டமை என்பவை பற்றியும் தனது மஹிந்த ராஜபக்ச குறித்த கண்டனத்தில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை காலமும் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டோரை அங்கத்துவப்படுத்தும் அமைப்புகள் மற்றும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அரசியல் கட்சிகளே கண்டனங்களை இடையறாது வெளியிட்டு வருபவையாக இருக்கின்றன. ஆனால், தனது சுயமான அவதானிப்பு
மூலமாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஐ.நா. கொழும்பு அலுவலகம் ஐ. நாவின் 75ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தின ராக கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததை கண்டித்துள்ளதை அவதானிக்கும்போது, சர்வதேச சமூகம் இலங்கையின் வடக்கு -கிழக்கின் யுத்த பாதிப்புகள் குறித்த தனது நிலைப்பாடுகளில் தொடர்ந்து உறுதியாக இருக்கின்றதென்பதையே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தனது கண்டனத்தில், ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட, இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் கோரிக்கைகள் அடங்கிய பிரேரணை எவ்வாறு தட்டிக்கழிக் கப்பட்டுள்ளதென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர, இன்றைய ஆட்சியாளர்கள் நாட்டை எவ்வாறு ஓர் இராணுவ மயப்படுத் தப்பட்ட நிலைக்கு விரைந்து கொண்டு செல்லுகின்றனர் என்பதையும் தெரிவித்திருப்பதுடன், முக்கிய சிவில் நிர்வாகப் பொறுப்புகளில் இராணுவப் பின்னணியைக் கொண்டோர் நியமிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது.
எனவே, மனித உரிமைகள் கண்காணிப் பகத்தின் இக் கண்டன அறிக்கை, ‘நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்பது போல, உலகின் முன்னணி நிறுவனமாக ஐ. நா இருக்கலாம் ஆனால், யுத்தகுற்றங்களோடு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள இலங.கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை ஒரு முக்கிய மான ஐ. நா நிகழ்வுக்கு கொழும்பில் பிரதமவிருந்தினராக அழைத்தமை பெருந்தவ றென்று சுயமாகவே தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை, சர்வதேச சமூகம் தொடர்ந்து வடக்கு – கிழக்கில் மனிதாபிமான பிரச்னைகள் குறித்து மிக விளிப்புடனிருப் பதையே அறியமுடிகின்றது.