ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கொழும்பின் மிக மோசமான பேர்வழிகள் நடமாடுமடும் பிரதேசமென கருதப்படும் முல்லேரியா நகரில் 2011 ஆம்ஆண்டு ஒக்ரோபர் மாதம் 8ஆம் திகதி முன்னாள் பாராளு மன்ற உறுப்பினரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றுமொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது மரணதண்டனைக் கைதியாகவும் சிறைச்சாலையில் இருக்கும் துமிந்த சில்வாவினால் பட்டப்பகல்வேளை சுட்டுக்கொல்லப்பட்டார்.
இருவருக்குமிடையே அரசியல் ரீதியான போட்டி இருந்து வந்துள்ளது. கொலையாளி துமிந்த சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசுவாசத்துக்குரியவராக இருந்துள்ளார்.
வாட்டசாட்டமான ஒரு மல்யுத்த வீரர் போன்ற உடலமைப்பைக்கொண்ட துமிந்த சில்வா, ஒரு பிரபல கேடி என்பதோடு அவர் போதைவஸ்துக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டிருந்தார். இந்நிலையில், 2011 ஒக்ரோபர் 8ஆம் திகதி முல்லேரியாப் பகுதியில் துமிந்த சில்வாவும், பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும் இருவேறு அரசியல் பேரணிகளில் வந்தபோது, இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் பாரத லகஸ்;மன் பிரேமச்சந்திரவை நோக்கி துமிந்த சில்வா துப்பாக்கி பிரயோகம் செய்யுமளவுக்கு முறுக்கேறியிருந்தது இத்துப்பாக்கிப்பிரயோகத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும் அவரது
மெய்ப்பாதுகாவலர்கள் மூவரும் துமிந்த சில்வாவினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ட்ரயல் அட்பார் முறையில் 2016ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்ட பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு விசாரணை, துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்தது.
இத்தீர்ப்புக்கு எதிராகச் செய்யப்பட்ட மேன்முறையீடும் தோல்வியையே தழுவிய நிலையில், துமிந்த சில்வாவுக்கு வழங்கப் பட்ட மரண தண்டனை உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது மீளவும் துமிந்த சில்வா விவகாரம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளதுடன் அவரை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து ஆளுந்தரப்பில் ஒருசாரார் அதற்கென மனுவொன்றையும் தயாரித்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையிலும் இறங்கியுள்ளனர்.
பட்டப்பகலில் பலர் முன்னிலையில் ஓர் அரசியல்வாதியையும் அவரோடு சேர்த்து வேறு மூவரையும் கொலை செய்த மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலையாளியின்
விடுதலைக்காக கையெழுத்து வேட்டை நடத்தி, ஒரு மனுவொன்றை கையளிக்க
முடியுமானால், பல வருட காலமாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் சிறை
களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாள நூறு தமிழ் அரசியல் கைதிகளின் விடு
தலைக்காக ஏன் ஒரு மனுவை கையெழுத்து வேட்டை நடத்தி ஜனாதிபதியிடம்
கையளிக்க முடியாதென்பதே அபிப்பிராயமாக இருக்கின்றது.
எனவே, படுகொலையாளி துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பாக அவரது
ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்படும் நட வடிக்கைகள், மறுபுறத்தே குற்றச்சாட்டுகளே
சுமத்தப்படாது சிறைகளில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்
அரசியல் தரப்பினால் காட்டப்படும் அசமந் தப்போக்கையே கோடிட்டுக் காட்டுவதாக இருக்கின்றது