மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீடிப்பு !

0
116

இலங்கையின் மேல் மாகாணம் முழுவதும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை (2) காலை 5.00 மணிக்கு ஊரடங்கை நீக்குவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை மேலும் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தை தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பொலிஸ் பிரிவு, குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகர் மற்றும் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு ஆகியவற்றிற்கும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்

இதற்கு முன்னர்  மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது உகந்த விடயமில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண இதனை தெரிவித்திருந்தார்.

மேல்மாகாணத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டத்தினை நீக்குவதால் ஏனைய பகுதிகளி;ற்கு கொரோனா வைரசினை பரவும் ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் வைரஸ் பரவல் அதிகரித்தால் அதற்கான பொறுப்பை சுகாதார அதிகாரிகளும் அரசாங்கமும் பொறுப்பை ஏற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுடிருந்ததுடன்  தற்போது கொரோனா வைரஸ் கொழும்பு மாநகர சபை எல்லை மற்றும் வத்தளையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பரவலை தடுத்து நிறுத்துவதற்காக ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here