13 ஆவது நீங்காத நினைவில் வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்.

0
207

1993 முதல் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் நிலையைப்பெற்று கடசிவரை ஓர் இலட்சிய போராளியாக, அரசியற் பொறுப்பாளராக அனைத்துலகத்தோடு உறவாடிய இராசதந்திரியாக பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒருஅரசியல் தலைவனாகத் திகழ்ந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் 02.11.2007 அன்று சிங்கள வான்படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவருடன் லெப்.கேணல். அன்புமணி ( அலெக்ஸ் ) மேஐர்.மிகுதன், மேஐர் கலையழகன் (நேதாஜி) லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன், மேஐர்.செல்வம் ஆகியோரும் வீரச்சாவைத்தழுவிக்கொண்டனர்.
இம் மாவீரர்களின் 13 ஆவது நீங்காத நினைவில் வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்.
(கோவிட் 19 பிரான்சு நாட்டின் பொது முடக்கம் காரணமாக பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் திருவுருவச்சிலைக்கு ( லாக்கூர்னோவ்) முன்பாக மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தல் வணக்கம் செய்வது இந்தத் தடவை நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here