அசர்பைஜான் மீது கடந்த புதன்கிழமை அர்மீனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அசர்பைஜானைச் சேர்ந்த 21 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக, கடந்த மாதம் முதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகின்றது.
இதில் ரஷ்யா தலையிட்டு ஏற்படுத்திய 2 சண்டை நிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தன.
3ஆவதாக அமெரிக்கா தலையீட்டில் உருவான சண்டை நிறுத்தமும் தோல்வி முடிந்தது. இந்நிலையில் அசர்பைஜானிலுள்ள பர்தா நகரத்தின் மீது அர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந் தாக்குதலில் 21 பேர் வரை பலியானதுடன் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அசர்பைஜான் ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் ஹிக்மெட் ஹாஜியெவ் கூறியுள்ளார்.