தற்போது பரவும் கொரோனா வைரஸ் அதிக தொற்றுதன்மை கொண்டது என்பது சிறீஜெயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் தற்போதைய கொரோனா பரவலிற்கு வெவ்வேறு விகாரங்களின் பரவுதல்கள் தான் காரணமா என்பது குறித்தும் சில மாறுதல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்தும் பல்கலைகழகம் ஆராய்ந்துள்ளது.
தற்போது பரவும் வைரசிற்கும் முன்னர் பரவிய வைரசிற்கும் இடையிலான தொடர்பினை கண்டுபிடிப்பதற்காவும் சிறீஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
இதன்போது தற்போது பரவி விகாரம் முன்னர் காணப்பட்டதை விட மாறுபட்டது என்பது தெரியவந்துள்ளது.
இது அதிகளவு பரவல் தன்மையை கொண்டது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் விகாரமே மினுவாங்கொட கொழும்பு மாநகரசபை பேலியகொட மீன்சந்தை போன்ற பகுதிகளில் தொற்றிற்கு காரணம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது