அம்பாறையில் பலத்த காற்று ! மின்னல்தாக்கி கணவன் மனைவி பலி !

0
67

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை மற்றும் தம்பிலுவில், திருக்கோவில் போன்ற பகுதிகளில் வீசிய சுழல் காற்றுக் காரணமாக வீதிகளில் அதிகளவிலான தூசு மண் வீசப்பட்டன.

இதனால் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வீதிப் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டன.

இதனால் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் மழை நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் பலவற்றிலும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மாலை வேளையில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச்சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று(30) வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இடம்பெற்றது.

வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46வயதுடைய லோகநாயகம்

யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார்.

இவர்கள் விவசாயிகளாவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு.

திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் வி.ஈ.கமலராஜன் சம்பவ இடத்திற்கு

விரைந்து பிரேத நடவடிக்கைகளை மேற்கொணடார். குறித்த தம்பதியினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here