இலங்கையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 பேருக்கும், முல்லைத்தீவை சேர்ந்த 3 பேருக்கு மாக வடக்கு மாகாணத்தில் நேற்று (30) மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவை சேர்ந்த 2 பேருக்கும், யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதி காரி பிரிவை சேர்ந்த ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப் பட்டதாக யாழ். போதனா வைத் தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் தாய்க்கும் அவரின் 10 வயதான மகளுக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்தவர்கள். பெண்ணின் கணவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த தாயும் மகளும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
நேற்றைய தினம் அவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரி சோதனை நடத்தப்பட்டது. முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதியானது.
இதேவேளை பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாய் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்
படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் விடுதி ஒன்றின் உரிமையாளருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத் தப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புங்குடுதீவை சேர்ந்த இருவர், வேலணையை சேர்ந்த ஒருவர் யாழ். மாநகரப் பகுதியை சேர்ந்த ஒருவர் என நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.