துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமானதாக துருக்கி முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளது..
முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாகவும், 120 பேர் காயம் அடைந்ததாகவும் விசேட துருக்கி சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கு பகுதிகள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். பல கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இங்குதான், 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமாயின.. அந்த கட்டிட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.