நெடுந்தீவை ஆக்கிரமிக்க முயற்சி ! வெடியரசன் கோட்டை பௌத்த சின்னமாகிறது!

0
115

நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்று முன்தினம் (28) சத்தம் சந்தடியின் றித் திடீர் விஜயம் ஒன்றை மேற் கொண்ட தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர், புத்த சாசன அமைச் சின் பிரதிநிதி ஒருவர் மற்றும் பௌத்த துறவிகள் அடங் கிய குழுவினர் அங்குள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த சின்னமாகக் காட்டும் கபட நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர் என அப்பகுதி மக்கள் ஆத்திரத்துடன் விசனம் தெரிவிக் கின்றனர்.

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டை என்பது தமிழ்,பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் அங்கு கருத்துரைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் விகாரதிபதியுடன் பயணித்து, அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து ஆகியன தொடர்பாகவும. அவர்கள் ஆராய்ந்துள்ளனர்இதன்போது அப்பகுதிகளை அவர்கள்

படமாக்கியதுன் அப்பிரதேசத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் ட்ரோன் கமராவின் உதவி கொண்டும் நீண்ட நேரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக வெடியரசன் கோட்டைப் பகுதியினை பௌத்த சின்னமாகக் காண்பித்து அதனை ஆக்கிரமிக்கவோ அல்லது அப் பகுதி யிலும் ஓர் விகாரையை அமைத்து நெடுந் தீவினையும் சிங்கள மயமாக்கும் முயற்சியை முன்னெடுக்கவோ தீவிர நடவடிக்கை எடுக்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here