அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: சொந்த ஊரில் வாக்களித்தார் ஜோ பிடன்.

0
271

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான  ஜோ பிடனும்(Joe Biden) அவரது மனைவி ஜில் (Jill Biden) பிடனுடன் தமது சொந்த ஊரான வில்மிங்டனில் தமது வாக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா விவகாரத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) நிர்வாகம் கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் ட்ரம்ப் யதார்த்தமான நிலவரம் குறித்தோ அறிவியல் பூர்வமான முடிவுகள் குறித்தோ கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தேர்தலுக்கு மேலும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here