விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தேக்கம் காடு அழிக்கப்படுகிறது !

0
480

போர் சூழல் காலத்திலும்  2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கு மரங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 4 வருடங்களுக்குள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இவ்வாறு தேக்கு மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு அரச மரக் கூட்டுத்தாபனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்படாது ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தால் மீள வனமாக்கல் என்ற போர்வையில் அரசமரக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களில் தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிப்புப் பகுதியில் 40 ஹெக்டேயர் நிலப்பரப்பிலிருந்த தேக்கு மரங்கள் இதுவரை வெட்டப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கி, அரச இயந்திரங்களின் உதவியோடு

திட்டமிட்டு தேக்கு மரக்காடுகள் அழிக்கப்படுவதால் இயற்கைச் சூழல் பாதிக்கப்படு

கின்றது.

ஒருபுறம் மணல் அகழ்வின் மூலம் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்ற அதே

வேளை, இன்னொரு புறத்தில் கிரவல் அகழ்வின் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி சட்டவிரோத கடத்தல்கள் மூலம் இன்னொரு புறம் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here