பிரான்சில் பொதுமுடக்கம் அமுல் !

0
124

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் நாளை  வெள்ளிக்கிழமை (30) முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளதாக அதிபர் இம்மானுவேல் மக்ரோன்நேற்று தெரிவித்தார். நேற்று (28) தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் மக்களை காப்பது தனது கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேலைக்கு செல்வதற்கும், பள்ளிக்கு செல்ல, மருத்துவரைச் சந்திக்க, வேண்டியவர்களுக்கு அவசரத்தில் உதவ, அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அனுமதி சான்றுடன் வெளியே செல்லலாம்.

வெளியே செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள்,  மற்றும் அத்தியாவசியமில்லாத வணிகங்கள் மூடப்பட்டிருக்கும்.

பல்கலைக்கழகங்கள், உயர்நிலைப் பள்ளிகள் இணையம் வழியே இயங்கும்.

ஐரோப்பிய எல்லை திறந்திருக்கும்.

வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திற்குள் வெளியே செல்வதற்கு அனுமதி.

பிள்ளைகளுடன் பள்ளி செல்ல, முதியவர்களுக்கு உதவ, மருத்துவர் அல்லது மருந்தகங்களுக்கு செல்ல தக்க அனுமதி சான்றுடன் வெளியே செல்லலாம்.

பிரெஞ்சு குடிமக்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வர அனுமதி.

இறுதி நிகழ்வுகளுக்கு அனுமதி.

ஒன்றுகூடல்கள் தடை செய்யப்படுகின்றன.

வீட்டை விட்டு வெளியே வரும்போது அரசு கூறிய அனுமதி சான்றுடன் அல்லது பணிக்கு செல்லும் அனுமதி சான்று இருக்க வேண்டும்.

அனுமதி சான்றில்லாமல் வெளியே செல்பவர்களுக்கு 135  அபராதம்.

பள்ளிகள், அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் வழங்கும் வணிகங்கள்,

தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள்,பொது நிர்வாக சேவைகள்

விவசாயம் சார்ந்தவை செயற்படும்.

மருத்துவமனைகள் நிரம்பி வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  கூறிய பிரான்சு அதிபர் மக்ரோன் , மேலும், பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை இதன் தாக்கம் அளவிடப்பட்டு அதனடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுக்கப்படும் என்றார்.

இந்த ஊரடங்கு டிசம்பர் 1 ஆம் தேதி வரை குறைந்தது 4 வாரங்கள் அமுலில் இருக்கும்.

வெளியே செல்வதற்கு கீழே இருக்கும் இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளவும்.

https://media.interieur.gouv.fr/attestation-couvre-feu-covid-19/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here