ஒருபோதும் அனுமதிக்காது அமெரிக்கா -உறுதிபடத் தெரிவித்தார் பொம்பியோ.

0
568

பல நூறு உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறுதாக்குதல் உட்பட அடிப்படைவாத வன்முறைகளையும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது” என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கான விஜயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடுகையிலேயேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று மாலை அணிவித்து வழிபட்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற இடங்களையும் பார்வையிட்டேன். பல நூறு அப்பாவி மக்களின் உயிர்கள் அந்த தாக்குதலின் போது காவு கொள்ளப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here