ஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.!

0
114

பிரான்ஸின் தென் கிழக்குப் பகுதி நகரம் ஒன்றில் துருக்கியர்களும் ஆர்மீனிய நாட்டவர்களும் நடுத் தெருவில் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

ஆர்மீனியாவுக்கு ஆதரவாக பிரான்ஸில் வாழும் அந்நாட்டு சமூகத்தினர் இன்று காலை Isère (Auvergne-Rhône-Alpes) பகுதியில் ஏ7 நெடுஞ்சாலையில் வாகனப் பேரணி ஒன்றை நடத்த முற்பட்ட வேளையிலேயே துருக்கிய சமூகத்தினருக்கும் ஆர்மீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இரு சமூகத்தவர்களும் கத்திகள், பொல்லுகள் , சுத்தியல்கள் கொண்டு வீதியின் நடுவே ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர் என்று பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இரு சமூகத்தவர்களது மோதல் காரணமாக ஏ7 வீதியில் இரு புறமும் போக்குவரத்துகள் இன்று காலை சில மணிநேரம் தடைப்பட்டிருந்தன. மோதல்களில் காயமடைந்த நால்வர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

நஹர்னோ கரபாக் (Nagorno-Karabakh) என்னும் பிராந்தியத்தின் ஆதிக்கம் தொடர்பாக ஆர்மீனியாவும் அஜர்பைஜான் நாடும் தற்சமயம் கடும் போரில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. ஆர்மீனியர்கள் அதிகமாக வசிக்கும் நஹர்னோ கரபாக் மாகாணத்தின் மீது தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்ததுவதற்காகப் போரில் ஈடுபட்டிருக்கும் அஜர்பைஜானுக்கு துருக்கிய அரசு ஆதரவு வழங்கி வருகிறது.

தமது இனத்தின் மற்றோர் இன அழிப்புக்காக துருக்கி அஜர்பைஜானுக்கு இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றது என்று ஆர்மீனியர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

பிரான்ஸில் இன்று நடைபெற்றிருக்கும் துருக்கிய, ஆர்மீனிய சமூகக் கலவரத்தின் பின்னணி இதுவேயாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here