பொறுப்புக்கூறல் நீதிக்கான நல்லிணக்கம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

0
93

இலங்கை மக்கள் பேண்தகு அபிவிருத்தியுடன் இறைமையும் சுதந்திரமும் கொண்டவர்களாக விளங்கவேண்டும் என அமெரிக்க விரும்புகின்றது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார்.

நட்புறவு மிக்க சகா என்ற அடிப்படையில் அமெரிக்கா அதனையே வழங்குகின்றது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடுகள் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ நான் இந்தியாவிற்கும் இங்கும் சுற்றுப்பயணம மேற்கொண்டுள்ளேன் இனி மாலைதீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் செல்லப்போகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஜனநாயக நாடுகள் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பாதைகள் குறித்து பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்த ஜனநாயக நாடுகள் மக்கள் தாங்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்லலாம் என்பது குறித்தும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான திறமை குறித்தும் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன. இவையே இலங்கை மக்கள் அமெரிக்காவுடன் பகிரவிரும்பும் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மதிக்கப்படும் அமைதியான தேசமொன்றில் அனைத்து மதப்பிரிவினரும் வாழ்வதை அமெரிக்கா விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை ஜனாதிபதி தனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைவருக்குமான ஜனாதிபதி நான் என தெரிவித்தார். இரண்டு நாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்லும் இந்த வேளையில் அமெரிக்காவின் வார்த்தைகள் உண்மையானவையாக மாறும் என எதிர்பார்க்கின்றது எனவும் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்ற தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here