கிளிநொச்சி – கௌதாரி முனையில் தரைப் பகுதிக்குள் கடல்நீர் புகுந்ததால் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர் கள் அழிவடைந்துள்ளன என்று பூநகரி பிரதேச செயலர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (27) திடீரென கடல் நீர் உட்புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த இயற்கை மாறு தலால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் 100 ஏக் கருக்கும் அதிக நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடல் நீர் உட்புகுந் தமையால் 40 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெற்பயிர்கள் அழிவடைந்தன. திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் நேரில்சென்று ஆய்வு நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.