குருநகர், பாஷயூர்ப் பகுதிகளுக்கு ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (26) குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்
தமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டது.
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனைய வர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அந்தப் பகுதியைச் சாராதவர்கள், வெளிநபர்கள் உட்செல்வதற்கு சுகாதாரப் பகுதியினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீதித் தடைகளில்
படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.