கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூன்று பிள்ளைகளின் தாயார் டெங்குக்கு பலி !

0
84

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோயினால் பெண்ணொருவர் நேற்று (26)திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி ஜும் ஆ பள்ளிவாயல் வீதி மூன்றாம் குறுக்கு வீதியில்மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த  43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் ,டெங்கு நோய் பரவும்வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக் கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற-து.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here