போலந்து ஜனாதிபதி அன்ரேஜ் டுடாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் தான் நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு நோயறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை எனவும் எவருக்காவதுதொற்று ஏற்படத் தான் காரணமாகவிருந்திருந்தால் அதற்காக தன்னை மன்னிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
48 வயதான டுடாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதைன மேற்கொள்ளப்பட்ட நிலையிலே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு எப்போதுஇந்தத் தொற்று ஏற்பட்டது என்பது அறியப்படவில்லை.
டுடா கடந்த வார ஆரம்பத்தில் எஸ்தோனிய தரலநகரில் இடம்பெற்ற நிகழ்வில் பல்கேரிய ஜனாதிபதி றுமென் ராடெவ் சகிதம் கலந்து கொண்டிந்தார். ராடெவ் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டார்.