தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவு சர்வதேசமெங்கும் தமிழீழ மக்களால் அனைத்து வழிகளிலும் கொடுக்கப் பட்ட வேளை விடுதலைப்போராட்டத்தின் பெரும் பலமாகவும் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக திகழ்ந்தது பொருளாதாரப்பங்களிப்பே. அதனை மக்களிடம் சென்று பெற்று சர்வதேச நிதிப்பொறுப்பாளராக இருந்து சிறீலங்கா தேசத்தின் கடல்கடந்த பயங்கவாத செயல்களில் அவர்களின் கூலிப்படையினால் பிரான்சு பாரிசு மண்ணிலே 26.10.1996 ல் கோழைத்தனமாக மாவீரன் லெப். கேணல் நாதன் ( கந்தையா பேரின்பநாதன்) இவரோடு இணைபிரியாத நண்பனாக இருந்து தனது பன்முக ஆற்றலினால் விடுதலைக்கு பலம் சேர்த்து ஈழமுரசு பத்திகையின் ஆசிரியராகவும் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்து தனது எழுத்தினால் உரம்சேர்த்த மாவீரன் கப்ரன் கஜன் ( கந்தையா கஜேந்திரன்) ஆகிய இருவரும் படுகொலைக்கு உள்ளாகியிருந்தனர்.
24 ஆண்டுகள் ஆகிய இம்மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு 26.10.2020 திங்கள் கிழமை பி. பகல் 15.00 மணிக்கு அவர்கள் பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒபவில்லியே துயிலுறங்கும் துயிலும் இல்லத்தில் நடைபெற்றது.
பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் துணைப்பொறுப்பாளர் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த திரு. அன்ரனி அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர் லெப். கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோருக்கான ஈகைச்சுடரினை கப்டன் கஜனின் சகோதரரும் மாவீரர் கப்டன் துரியோதனன் அவர்களின் சகோதரரும் ஏற்றி வைக்க கப்டன் கஜனின் சகோதரர்கள் மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் மாலை அணிவித்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தலுக்கு வந்திருந்த அனைவரும் மாவீரர்களுக்கான சுடர் மலர் வணக்கத்தைச் செய்திருந்தனர்.
மாவீரர் நினைவுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றினார்.
ஒரு விடுதலையை தங்கள் நெஞ்சில் இருத்தி அதனை வென்றிடுவோம் தாம் இல்லாவிட்டாலும் தன் இனமும் எம் சந்ததியும் அதனை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு மண்ணில் விதையாகிப் போன ஆயிரமாயிரம் மாவீரர்களில் இவர்களும் அடங்குவர். பல மாவீரர்களை நாம் காணவில்லை ஆனால் இந்த மாவீரர்களை நாம் கண்டிருக்கின்றோம் பழகியிருக்கின்றோம் வாழ்ந்திருக்கின்றோம் ஆனால் 24 ஆண்டுகளாகியும் அவர்கள் நினைவுதான் இன்று எங்களிடம் நேற்றுப்போல் பசுமையாக நிற்கின்றது.
இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கு கோவிட் 19 வைரசிலிருந்து எமது மக்களும் சரி அனைத்து மக்களும் உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய மனிதநேயத்துடன் நிற்கும் போது கூட சிங்களப் பேரினவாதமும் அதன் பௌத்தமும் எதையுமே கருத்தில் கொள்ளாது தமிழ்மக்களை வேரோடு மாற்றுகின்ற இல்லாமல் செய்கின்ற வகையில் புதிய புதிய யாப்புகளை தமக்கு சாதகமாக உருவாக்கி தம்மையும் தமது அராஜகத்தின் ஆட்சியையும் நீடித்து செல்ல முயற்ச்சித்துக்கு நிற்கும் வேளை சர்வதேசத்திடம் நீதியை எதிர்பார்த்து நிற்கும் தமிழ்மக்கள் பல வழிகளிலும் எடுத்துச்செல்ல வேண்டும் இதனை செய்ய இன்று தகுதியாக வளர்ந்து நிற்பவர்கள் எமது இளையவர்களே அவர்களை ஒவ்வொரு பெற்றோரும் சொல்லி வளர்க்க வேண்டும் அவர்கள் சனநாயக வழியில் அதனை முன்னெடுத்து தமக்கானதொரு தேசத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்
இன்று உலகமே கொடிய கோவிட்19 வைரசினால் திணறிக் கொண்டிருப்பதோடு அதிலிருந்து தனது மக்களை காப்பாற்றி வைரசு தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் சுகாதார வழிமுறைகளையும் நாட்டுத் தலைவரால் விடுக்கப்பட்டிருக்கு பாதுகாப்பு வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து கடைப்பிடித்து செல்லவேண்டிய நிலையில் வரப்போகும் எம் தேசத்தின் தேசிய எழுச்சி நாளான மாவீரர்நாள் பிரான்சு நாட்டின் அந்த நேரத்தில் கொடுக்கப்படும் சட்டதிட்டங்களுக்கு அமைய மாவீரர்களுக்கான மாவீரர்நாள் நினைவேந்தல் அந்நாளில் 27 நவம்பர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தமிழர் ஒருங்கிணைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அது சம்பந்தமான விரிவான நடைமுறை அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே தன் தலைமுறையையும் தன் சந்ததியையும் நம்பி மண்ணில் புதையுண்டு போன உன்னத மாவீரர்களின் கனவுகளை நினைவேற்ற தொடர்ந்து உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டும் என்றும் அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான கைமாறாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரகத்துடன் நினைவேந்தல் நிறைவு பெற்றது.