தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தால் தேசிய மாவீரர் நாளையொட்டி நடாத்தப்படும் கலைத்திறன் போட்டிக்கான விண்ணப்ப முடிவு நாள் 01.11.2020 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
தற்போது நடைபெற்று வரும் கோவிட் 19 நுண்கிருமித் தொற்று காரணமாக தமிழ்ச் சோலைப் பள்ளிகள் சீராக நடாத்தமுடியாது உள்ள நிலையும், மாவீரர் நாள் குறித்த காலத்தில் நடைபெறுமா? என்றகேள்வியும் மக்களிடையே உள்ளதை நாம் அறிவோம். இதனால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக பலருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கலைத்திறன் விண்ணப்ப முடிவு நாளை நீடித்துள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம்.
மாவீரர்களை நினைவு கூருவதை சிறிலங்கா அரசு பல வழிகளிலும் நிறுத்த நிர்ப்பந்திப்பதோடு எமது இளையதலைமுறையினரை மறக்கவும் செய்ய எத்தனித்து வருகிறது. இந்நிலையில் புலம்பெயர் மண்ணில் வாழும் நாம்தான் விடுதலை பற்றிய நினைவுகளையும், நிகழ்வுகளையும் எமக்குள்ள சுதந்திரத்தோடு முன்னெடுக்க வேண்டியவர்களாகின்றோம். இதனைக் கருத்தில் கொண்டு எம் சிறார்களை விடுதலைபற்றிய சிந்தனையோடு வளர்ப்போம்.
Home
சிறப்பு செய்திகள் தமிழீழத்தேசிய மாவீரர் நாள் 2020 பிரான்சுக் கலைத்திறன் போட்டிக்கான விண்ணப்ப முடிவு நாள் நீடிக்கப்பட்டுள்ளது .