சீனா தொடர்பாக இலங்கை கடினமான ஆனால் அவசியமான முடிவுகளை எடுக்கவேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ள சீனா அமெரிக்கா பனிப்போர் கால மனோநிலையை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளது.
சீனாவுடனான உறவுகளை தொடர்வதா என ஏனைய நாடுகள் தீர்மானிக்கவேண்டும் அமெரிக்கா அச்சுறுத்துகின்றது என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இவ்வாறான நடவடிக்கைகள் வெற்றியளிக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த கருத்து அமெரிக்காவின் பனிப்போர் கால மனோநிலையை இது வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் அதிகரித்து வரும் உறவுகள் தொடர்பில் இலங்கையை மிகவும் கடினமான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ கேட்டுக்கொள்ளவுள்ளார். என தென்னாசியாவிற்கான அமெரிக்க தூதுவர் டீன் தொம்சன் தெரிவித்துள்ளார்.
.
இலங்கை விஜயத்தின் போது மைக்பொம்பியோ மனித உரிமைகள் நல்லிணக்கம்,ஜனநாயகத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பு குறித்த கேள்விகளை எழுப்புவார் என தென்னாசியாவிற்கான பிரதான இராஜதந்திரி டீன்தொம்சன் தெரிவித்துள்ளார்.
பாரபட்சமான வெளிப்படையற்ற நடவடிக்கைகளுக்கு பதில் வெளிப்படையான பேண்தகு பொருளாதார அபிவிருத்திக்காக நாங்கள் வழங்கும் தெரிவுகளை இலங்கை பரிசீலனை செய்யவேண்டும் என நாங்கள் அந்த நாட்டினை ஊக்குவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த கருத்து தெளிவாக சீனாவை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.
நீண்ட கால செழிப்பிற்காக அதன் பொருளாதாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக இலங்கையை கடினமான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை வழியுறுத்துகின்றோம் எனவும் தோம்சன் தெரிவித்துள்ளார்.