உலகை மக்களை மிரட்டி வரும கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த மருந்து கண்டுபிடிக்கும்பணியில் உலக நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டிலும், உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகாஎன்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இது ஏற்கனவே இருகட்ட மனித சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 3வது கட்ட மனிதசோதனைகள் நடைபெற்று வருகின்றன.ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 3 ஆம் கட்டம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute) நிறுவனத்துடன் இணைந்து 2 மற்றும் 3 கட்டம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஏற்கனவே 2வது கட்ட சோதனையின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறி சோதனை நிறுத்தப்பட்டது. தற்போது, அவை சரி செய்யப்பட்ட நிலையில் 3வது கட்ட சோதனையை தொடங்கி உள்ளது. அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்து உள்ளது. குழந்தைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்ட இருப்பதாகவும் தகவல்கள் வௌளியாகின.இந்த நிலையில், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28வயதான தன்னார்வலர் ஒருவர் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றிருந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேசில் அரசோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த குழுவை அமைத்துள்ளது பிரேசில் நாடு. ஆனால், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவித்துள்ளது.