சீனாவுடனான உறவுகள் குறித்து மிகவும் கடினமான தெரிவுகளை இலங்கை மேற்கொள்ள வேண்டுமென மைக்பொம்பியோ வேண்டுகோள் விடுப்பார்- அமெரிக்க இராஜதந்திரி.!

0
143
மைக்பொம்பியோ

சீனாவுடன் அதிகரித்து வரும் உறவுகள் தொடர்பில் இலங்கையை மிகவும் கடினமான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ கேட்டுக்கொள்ளவுள்ளார்.

தென்னாசியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் டீன் தொம்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏஎவ்பி தெரிவித்துள்ளதாவது.
இலங்கை ஏதேச்சதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில்; சீனாவுடன் அதிகரித்து வரும் உறவுகள் தொடர்பில் இலங்கையை மிகவும் கடினமான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ கேட்டுக்கொள்ளவுள்ளார்.

கொழும்பு இந்தியா மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது விஜயத்தின் போது மைக்பொம்பியோ சீனாவை சுற்றியுள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை செய்யவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு புதிய அதிகளவு அதிகாரங்களை நாடாளுமன்ற வழங்கிய ஓரிரு நாட்களில் மைக்பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் ஏதேச்சதிகாரத்தை நோக்கிய நகர்வாக வர்ணித்துள்ளனர்.

மக்கள் ஆதரவு பெற்ற இலங்கை ஜனாதிபதி சீனாவினது இராஜதந்திர பொருளாதார ஆதரவை அனுபவிக்கின்றார்.அவரது சகோதரர் இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் சீனா மில்லியன் கணக்கான டொலர்களை அபிவிருத்தி திட்டங்களுக்கு வழங்கியது.இதில் பொருளாதார ரீதியில் பலனளிக்காத பல உட்கட்டமைப்பு திட்டங்களும் காணப்பட்டன. அவை இலங்கை அரசாங்கத்தை கடனிற்குள் தள்ளின.

இலங்கை விஜயத்தின் போது மைக்பொம்பியோ மனித உரிமைகள் நல்லிணக்கம்,ஜனநாயகத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பு குறித்த கேள்விகளை எழுப்புவார் என தென்னாசியாவிற்கான பிரதான இராஜதந்திரி டீன்தொம்சன் தெரிவித்துள்ளார்.

பாரபட்சமான வெளிப்படையற்ற நடவடிக்கைகளுக்கு பதில் வெளிப்படையான பேண்தகு பொருளாதார அபிவிருத்திக்காக நாங்கள் வழங்கும் தெரிவுகளை இலங்கை பரிசீலனை செய்யவேண்டும் என நாங்கள் அந்த நாட்டினை ஊக்குவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த கருத்து தெளிவாக சீனாவை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

நீண்ட கால செழிப்பிற்காக அதன் பொருளாதாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக இலங்கையை கடினமான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை வழியுறுத்துகின்றோம் எனவும் தோம்சன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here