இலங்கை நாடாளுமன்றத்தில் அமெரிக்க சீன பிரதிநிதிகள் இடம்பெறும் நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அமெரிக்க கொடியை பிடித்தபடி உரையாற்றியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நளின்பண்டார அமெரிக்காவின் பிரஜாவுரிமைiயும் கொண்டுள்ள இரட்டை பிரஜாவுரிமைகாரர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காகவே 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜைகள் செய்துகொண்ட சத்தியபிரமாணத்தை வாசித்துள்ள அவர் அந்த சத்தியப்பிரமாணத்தை செய்துகொண்டவர்கள் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் நுழைய முயல்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் அமெரிக்க சீன பிரஜைகள் அனுமதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன,பசில் ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டால் எதிர்கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.