தாய்லாந்தில் அரசுக்கெதிரான போராட்டம் வலுப்பெற்றுவரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு நீடித்து வரும் மன்னராட்சியில் மறுசீரமைப்பு கோரியும், பிரதமர் பதவி விலக வலியுறுத்தியும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை கலைக்கும் பொலிஸாரின் முயற்சியை சமாளிக்க, போராட்டக்காரர்கள் ரெயின் கோட், குடை, கண்ணாடி மற்றும் தலைக்கவசம் போன்றவற்றை அணிந்தவாறு போராடி வருகினறனர்.
மேலும், இரவு நேரங்களில் தொலைபேசியில் மின்விளக்கினை ஒளிரவிட்டும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.