அஜர்பைஜனின் இரண்டாவது பெரிய நகரான கஞ்ச் மீது ஏவப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந் நிலையில் அர்மேனியாவே இத்தாக்குதலை நடத்தியதாக அஜர்பைஜன் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ரஷ்யாவின் சமாதான முயற்சியின் பேரில் இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதும் மீண்டும் யுத்தம் நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.