நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்
கொள்ள காவல்துறையினர் மீண்டும் தடை விதித்துள்ளனர்.
ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய விவகாரமாக நீடித்து
வருகிறது. ஆலய நிர்வாகத்தையும், பூசகரையும் நீதிமன்றத்தில் அடிக்கடி நிறுத்தி, பூசை வழி பாடுகளை நிறுத்த சிறீலங்கா காவல்துறையினர் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.
கடந்த 9ஆம் திகதி இடம் பெற்ற வழக்கில், ஆலய நிர் வாகத்தை கைது செய்யவேண்டுமெனக் காவல்துறையினர், விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
ஏற்கனவே ஆலய வழிபாடுகளுக்கு காவல்துறையினர். தடை விதித்துள்ள நிலையில், பொது
மக்கள் ஆலயத்துக்கு தொடர்ந்து சென்று வந்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் ஆலயப் பூசகர் நெடுங்கேணி காவல் நிலையத்துக்கு
அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.
ஆலயத்தில் பொது மக்கள் வழிபாட்டுக்கு
சென்றாலும், பூசகரை கைது செய்வோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர் எனக் கூறப்
படுகின்றது. இதனால், தற்போது ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசைவழிபாடுகள் நிறுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது.