அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.!

0
79

இலங்கையில்  தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கையினை சிறீலங்கா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தணி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நுறு, இரு நூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனு மதிக்கப்படுகின்றார்கள்.
ஆனால் 15, 20 பேரே குண மடைந்து வீடு திரும்புகின்றார்கள். இந்த நிலையில் வைத்திய 
சாலைக் கட்டமைப்பில் பாரிய நெரிசல் ஏற்படுகின்றது. எனினும் இன்னும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு உட்படுத்துவதற் கான தேவை ஏற்படவில்லை.
கொரோனா தொற்றாளருக்கு 24 மணித்தியாலத்துக்குள் இரண்டு பி.சி.ஆர். பரிசோத 
னைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டு பரிசோதனைகளிலும் தொற்று 
இல்லை என உறுதிப்படுத் தப்பட்டால் அவர்கள் வீடு களுக்கு அனுப்பி வைக்கப்படு 
வார்கள்.
சமூகத்தில் தொற்று பரவியுள்ளதா என இப்போதைக்கு எம்மால் கூற முடியாது ஆனால் 
தற்போது மிகவும் ஒரு ஆபத் தான நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், தொற்றுநோய் விஞ்ஞான பிரிவிடம் சில தரவு கள் இருக்கின்றன. இராணுவத் திடமும் தரவுகள் இருக்கின்றன. அத்துடன் இன்னும் சில தரப்பி னரிடமும் தரவுகள் காணப்படு 
கின்றன.
குறிப்பாக பி.சி.ஆர் பரி சோதனை தொடர்பான எண் ணிக்கை தொற்று நோய் பிரிவு 
ஊடாக இன்றி சுகாதார அமைச்சின் ஆரம்பப் பராமரிப்பு சேவையின் பணிப்பாளருக்கே செல்கின்றது. இவையனைத்தும் ஒரு இடத்திற்கு வரவேண்டும்.
தொற்றுநோய்ப் பிரிவு தம்மிடம் உள்ள தரவுகளை மாத்திரம் வைத்து தீர்மானங் களை மேற்கொள்ள முடியாது. 
இதனால்தான் நாம் இதற்கான செயற்பாட்டுப் பிரிவொன்றை யோசனையாக முன்வைக்கின் றோம்-என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here