யுத்தமொன்றினை எதிர்கொள்வதற்கு சீன இராணுவத்தினர் தங்களை தயார்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவின் தென்பகுதி மாநிலமொன்றில் அமைந்துள்ள படையினரின் தளமொன்றிற்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சீன இராணுவத்தினர் யுத்தமொன்றினை எதிர்கொள்வதற்கு தங்கள் சக்தியையும் மனோநிலையையும் தயார்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படையினரை உயர்மட்ட விழிப்புணர்வை பேணுமாறு சீன ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
படையினர் மிகவும் விசுவாசமாகவும் மிகவும் நம்பகதன்மையுடனும் விளங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டம் என்றுமில்லாத உச்சநிலையில் காணப்படுகின்ற நிலையிலேயே சீன ஜனாதிபதியின் படையினருக்கான இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
தாய்வான் குறித்த விடயத்தில் காணப்படும் கருத்துவேறுபாடு காரணமாகவும்,கொரோனாவைரஸ் காரணமாகவும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.