உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரம் – ரணில் ஆதங்கம்.!

0
73

ஸ்ரீலங்காவின் புலனாய்வு சேவைகளில் இருந்த பலவீனமே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற முக்கிய காரணமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்றையதினம் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து புலனாய்வு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இஸ்லாமிய சமூகம் அதிகளவு தகவல்களை வழங்கியிருந்தனர்.

எவ்வாறாயினும் அத்தகவலின் அடிப்படையில் செயற்பட வேண்டியதுஅவர்கள் தான்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பான தகவலை வெளியிட அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இரண்டு வருடங்களுக்கும் அதிக காலம் எடுத்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here