நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை கைதுசெய்ய பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளது என பொதுபலசேனா அமைப்பினர் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இன்று நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறிய குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தி பாரதூரமான குற்றச்சாட்டை மூடிமறைக்க வேண்டாம். தவறுகளை திருத்திக் கொண்டு தண்டனை வழங்கவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபையில் வழங்கப்பட்ட தொழில் நியமணத்தில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன.
இம்முறைக்கேடு தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.