நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக இன்றைய தினத்தில் இருந்து பத்தனை தேசிய சிறீபாத கல்வியற்கல்லூரி சுய தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு இராணுத்தினர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டனர் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது இந்த பத்தனை தேசிய சிறீபாத கல்வியற் கல்லூரியில் மாத்திரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 500 பேர் தனிமைபடுத்த முடியுமென இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 250 மாணவர்களும் தூரபிரேதேசங்களை சேர்ந்த மாணவர்கள் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்போடு அவர்களின் சொந்த இடங்களுக்கு பேருந்துகளின் ஊடாக கொண்டு சேர்க்கப்பட்டதோடு அருகாமையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரிகக்கு வருகை தந்து தனியார் வாகனங்களின் ஊடாக அழைத்து சென்றனர்.
கல்லூரி விடுதிகளில் வசித்து வருகின்ற விரிவுரையாளர்களை குறித்த விடுதியில் இருந்து வெளியேறுமாறு இராணுவத்தினரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி உட்பட 11 தேசிய கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாளை காலை ஆசிரிய மாணவர்கள் வெளியேற்றப்படவுள்ளனர் எனவும்