அஜர்பைஜான் நகரமொன்றின் மீது ஆர்மேனிய படையினர் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அஜர்பைஜானின் கஞ்சா நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 33 பேர் காயமடைந்துள்ளனர் என அஜர்பைஜான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையில் யுத்தநிறுத்தம் தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டு சில மணிநேரங்களில் எறிகணை தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
மோதல்நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்து ஐந்து நிமிடத்திற்குள் அஜர்பைஜான் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் என ஆர்மேனியா தெரிவித்துள்ளது.
ஆர்மேனிய இனத்தவர்கள் பதில்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஆர்மேனியா அஜர்பைஜான் விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
நகர்னோ கரபாக்கின் தலைநகர் தாக்கப்பட்டுள்ளது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வார மோதலின் பின்னர் மொஸ்கோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளும் தற்காலிக யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்கியிருந்தன
27ம் திகதி முதல் மூண்டுள்ள மோதல்கள் காரணமாக 300க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.