இந்தியாவால் திணிக்கப்பட்ட உடன்பாட்டையும், 13-வது சட்டத் திருத்தத்தையும் ஒருபோதும் நிறைவேற்றமாட்டோம். இதுஎங்கள் உள்நாட்டு விவகாரம். எங்களது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சிறீலங்கா அமைச்சர் வீரசேகர கூறியிருக்கிறார். இது குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கைப் போரில் இந்தியாவின் உதவிக்கு பகிரங்கமாக நன்றி கூறிய ராஜபக்சே, இப்போது இந்தியாவுக்கு எதிராகத் தனது அமைச்சரைவிட்டு பேச வைக்கிறார்.
இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவின் வெளியுறவுத் துறைக்கான பொறுப்பாளராக உள்ளயாங் இலங்கைக்கு வந்து 16,500 கோடி டாலர் உதவி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிலைப்பாடு என்பது உட்பட பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இதுதான் அமைச்சரின் பேச்சுக்குப் பின்னணியாகும்.
எனவே இலங்கைக்கு ராணுவ உதவி, பொருளாதார உதவியை அளித்து வரும் இந்தியா, தனது கொள்கையைக் கைவிட வேண்டும். இல்லையேல் சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்த இலங்கை ஒருபோதும் தவறாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Home
சிறப்பு செய்திகள் இந்தியாவால் திணிக்கப்பட்ட உடன்பாட்டையும், 13-வது சட்டத் திருத்தத்தையும் ஒருபோதும் நிறைவேற்றமாட்டோம். !