வீடு வீடாக சிறீலங்கா இராணுவச் சோதனையில் !

0
89

அடையாளப்படுத்த தவறிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களைக் கண்டுபிடிப்ப 
தற்காக வீட்டுக்கு வீடு சிறீலங்கா இராணு வம் நிறுத்தப்பட்டுள்ளது. 
தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், பாதிக் கப்பட்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் சில ஊழி யர்கள் காவல் நிலையத்தால்  அறிவிக்கப்பட்ட மற்றும் ஒதுக் கப்பட்ட இடங்களுக்குச் சென்று தம்மை அடையாளப்படுத்தத் தவறிவிட்டனர்.
இதன் விளைவாக, இந்த ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற் காக வீட்டுக்கு வீடு சிறீலங்க இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மினுவாங் கொட கொரோனா கொத்தணி பரவலுக்கான  மூலத்தைக் கண்டறிய, சுகாதாரத் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வரு வதாகவும், சிறீலங்கா சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற் சாலையில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று சம்ப வத்தைத் தொடர்ந்து, அதிகளவான தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து தொழிற்சாலைகளிலும்  பி.சி. ஆர். பரிசோதனை களை நடத்த அறிவுறுத்தப்பட டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here