யுத்த காலத்தின் போது பயன்படுத்தப்பட்ட இரசான ஆயுதங்களாலும், வேறு பல காரணிகளாலும் வடக்கில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (07) தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக வடக்கில் புற்றுநோயாளர்கள் நாட்டின் ஏனையபகுதிகளைவிட அதிகமாகக் காணப்படுகின்றனர். போரின்போது பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களாலும் வேறுபல காரணிகளாலும் அங்கு புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. அநுராதபுரம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக செல்ல முடியாத மக்களுக்கான சிகிச்சை வழங்கும் நிலையமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய்ப் பிரிவு காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.