தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள்.!

0
437

தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி 
தமிழர் சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 33 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். 
தமிழீழத் தேசயத்தலைவரின் எண்ணக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் மாலதி . அந்நிய ஆக்கிரமிப்பில் தமிழர்  தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள்.
தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள்மாலதி , அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். 
அன்று (10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். 
1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல். 
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. அந்நாளே தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here