வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு.!

0
192

மினுவாங்கொடை ஆடை தொழில்சாலையிலிருந்து வந்தவர்கள் வடமாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார பணிமனைக்கு அறிவிக்கும்படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மினுவாங்கொடை ஆடைத் தொழில்சாலையின் ஊழியர்கள் பலர் பல்வேறுபகுதிகளில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

கம்பஹா, மினுவாங்கொடை தொழில்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் கொத்தணி, நாடுமுழுவதும் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தங்களுடைய தகவல்களை மறைப்பதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பின் மிகக்கடுமையான சவாலை சமூகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் யாரேனும் வடமாகாணத்தின் எப்பிரதேசத்தில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் MOH இற்கு தெரிவிக்குமாறும் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் வடமாகாண மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here