இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவும் இலங்கையும் சுதந்திரமான நாடுகள் ,அவற்றிற்கு தங்களின்தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வெளிநாட்டுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான உரிமையுள்ளது எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நெருக்கடியான காலங்களில் சீனாவும் இலங்கையும்பரஸ்பரம் ஆதரவாகவும் உறுதியாகவும் காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுரகம் சீனவுடனான உறவுகள் குறித்து இலங்கைமக்களும் அரசாங்கமும் தங்களின் சுயாதீனமான மதிப்பீடுகளை கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.