20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு நேற்று அனுமதி : சிறுபான்மையினருக்கு பாதிப்பு!

0
115

election 4445eதேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதன் படி பாராளுமன்ற உறுப்பினர் தொகை 237 ஆக உயர்த்தப்பட இருப்ப தோடு தொகுதிவாரி முறையினூடாக 145 எம்.
பிக்களும் தேசியப் பட்டியல் ஊடாக 37 எம். பிக்களும் மாவட்ட விகி தாசார முறையினூடாக 55 எம். பி களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
புதிய தேர்தல் மறுசீரமைப்பு முறைக்கு அமைச்சர் றவூப் ஹக்கீம், பதில் அமைச்சர் அமீர்அலி ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்ததோடு இதனால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படும்மென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இரட்டை வாக்குமுறை கொண்டு வரப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

அமைச்சர் திகாம்பரமும் சிறுபான்மை சார்பில் இங்கு கருத்துத் தெரிவித்துள்ளதோடு சிறுபான்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என அவர் இங்கு கோரியதாக அறியப்படுகிறது.

அமைச்சர்கள் றவூப் ஹக்கீம் மற்றும் பதில் அமைச்சர் அமீர் அலி ஆகியோருக்கும் அமைச்சர்களான சம்பிக ரணவக்க ராஜித சேனாரத்ன ஆகியோருக்குமிடையில் பலத்த வாதிப் பிரிவாதம் இடம்பெற்றதாகவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதியில் 237 ஆக எம். பி தொகையை உயர்த்தும் புதிய முறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. விசேட அமைச்சரவை கூட்டம் சுமார் 2 1/2 மணி நேரம் நீடித்ததாகவும் அறிய வருகிறது.

இதன்படி புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்பட ஏற்பாடாகியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here