பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டி வந்த ஹகுபிட் புயல் நேற்று முன்தினம் அங்கு கடு மையாக தாக்கியது.
அப்போது மணிக்கு 160 கி.மீ. முதல் 195 கி.மீ. வரை சூறாவளி காற்று வீசியது. ஆயிரக்கணக்கான மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன.
தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்தன. இந்தப்புயல் காரணமாக தாழ்வான கிராமங்களில் வசிக்கிறவர்கள், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசித்து வருகிறவர்கள் என 12 இலட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளி யேற்றப்பட்டு ஆயிரத்து 500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம், கூட்டமாக தங்க வைக்கப்பட்டுள்ளதால் அங்கு சுகாதாரப்பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தகவல் கள் கூறுகின்றன.
இயற்கை பேரிடரால் ஒரே நேரத்தில் இப்படி 12 இலட்சம் பேர் வெளியேற்றப் பட்டிருப்பது, உலகளவில் இதுவே முதற்தட வையாக கருதப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீதிகள் வெள்ளக்காடுகளாக காட்சி அளி க்கின்றன.
சாமர் தீவு, லேட்டே மாகாணம், தாக்லபான் நகர் ஆகியவை பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
இந்தப் புயலில் கிழக்கு சாமர் தீவில் 2 பேர் பலியாகினர். பலர் காணாமற் போயு ள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.