அம்பாறையில் சிறுவர் தினத்தை கரி நாளாகக் கொண்டு கவனயீர்ப்பு!

0
172

அம்பாறையிலும் இன்று (01) சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

மேலும்,10 வருடத்திற்கு முன்னர் யுத்தத்தின்போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே?, சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களை காணாமலாக்கியுள்ளது, இவ்வாறு காணாமலாக்கப்பட்ட குழந்தைகள் இலங்கை அரசிற்கு என்ன செய்தார்கள்? போன்ற கேள்விகளை இதன்போது எழுப்பினார்.

மேலும் இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகவே இந்த சிறுவர் தினத்தை கரிநாளாகவும் தங்களுக்கு சிறுவர் தினம் இல்லை எனவும் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது இலங்கை அரசால் காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக நீதி கோரி மகஜர் ஒன்றை மின்னஞ்சல் ஊடாக ஐ.நா. உயர் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here