இந்திய அரசின் தொடர் அடக்குமுறையால் சர்வதேச மன்னிப்புச் சபை பணிகளை நிறுத்துகிறது!

0
157

இந்திய அரசின் தொடர் அடக்குமுறைகளாலேயே அந்நாட்டில் பணிகளை நிறுத்துவதாக அந்தஅமைப்பின் இந்தியாவுக்கானஇயக்குநர் அவினாஷ் குமார்தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னிப்புச் சபையின் மீதானதொடர்ச்சியான அடக்குமுறை, அமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுதல் தற்செயலானது அல்ல.

அமுலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகாமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்த வண்ணம்இருந்தன. காரணம், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியதுதான்.சமீபத்தில் டில்லி கலவரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமைகள்மீறல் குறித்து காவல்துறை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்ய முடியாத அளவு அநீதி நிலவுகிறது. அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர இந்த அமைப்பு ஒன்றும் செய்துவிடவில்லை. மறுப்பையும், எதிர்ப்பையும் உறையச் செய்ய முயற்சி நடக்கிறது.

எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லாமல் குற்றம் செய்யும் நிறுவனங்கள் போன்று மனித உரிமைகள் அமைப்புகளை நடத்துவது, எதிர்ப்புத் தெரிவிக்கும் தனிநபர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவது என்பது விமர்சனக் குரல்களை ஒடுக்கும் ஒரு வகையானஅச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்குவதாகும்.சர்வதேச மன்னிப்புச் சபையான எமது அமைப்பு சர்வதேச சட்டம், இந்தியச் சட்டங்களுக்குஉடன்பட்டு, முறைசார்ந்தே செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒரு லட்சம்இந்தியர்கள்தான் இதில் நன்கொடை பங்களிப்பு செய்தனர். எனவே, இவை அந்நியநிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டுச்சட்டத்துடன் தொடர்புடையது அல்ல. சட்டரீதியான நிதித்திரட்டலை அரசு தற்போது நிதி மோசடியாகச் சித்தரிக்கிறது. மனித உரிமைகள் ஆர்வலர்களும் அமைப்புகளும் அரசின் செயலின்மையையோ,மீறல்களையோ சுட்டிக்காட்டினால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, மன்னிப்புச் சபை இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்கிறது. மன்னிப்புச் பைமீதான இந்திய அரசின் பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்குக்காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here