நேற்று முன்தினம் (28.09.2020) இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதானவரே சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பாதிக்கப்பட்ட தொழிலாளி, கடலில் சென்று கொண்டிருந்தபோதுசிறீலங்கா கடற்படையினர் அவரை மறித்துத் தாக்கியுள்ளனர்.இதில் பாதிக்கப்பட்டவர், முல்லைத்தீவு பொது மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.