இந்திய– அயோத்தி, பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர், உபாரதி உட்பட 32 பேரையும் விடுதலை செய்து குற்றப் புலனாய்வு பிரிவு (சிபிஐ) சிறப்பு நீதிமன்றம் இன்று (30) சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.
“பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும்” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் ஆளும் பாரதியா ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் அடங்கலாக 32 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.