1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் பத்தாம்நாள் இந்திய அமைதிகாக்கும் படை என்னும் பெயரில் தமிழ்மக்களின் உரிமைகளை காப்பதாக கூறி புலிகளின் ஆயுதங்களை களைந்த இந்தியப்படைகள் தம்மை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த புலிகளுடன் வலிந்த யுத்தம் ஒன்றை ஆரம்பித்தார்கள்.
அப்போதைய இந்தியபாதுகாப்பு மந்திரி பந்த் , இந்திய தூதுவர் தீட்சித்,இந்திய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சுந்தர்ஜி ஒருபுறமும், இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா , பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி மறுபுறமும் சேர்ந்து புலிகளை அழிப்பதற்கான சதிவேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதேவேளை புலிகளை அழிக்கும் இறுதிக்கட்ட பணிகளை இந்திய படைகளின் தென்பிராந்திய தளபதி திபேந்திர் சிங் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.
பலாலியில் நிலைகொண்டிருந்த 54 வது டிவிஷன் படையணிகளிடம் புலிகளின் தலைவரைக் கொன்று, புலிகளை அழித்து, யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இருதினங்களிற்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தது.
புலிகளை அழித்து, வெற்றிகொள்ளும் வெறி கண்களில் மின்ன “ஜெய் ஹிந்த்” என்னும் இந்திய சிப்பாய்களின் கோசத்தால் விண் அதிர்ந்தது.
ஆனால்,
“வெறும் சாறம் கட்டியவர்கள்” என இந்தியத் தளபதிகளால் இகழப்பட்ட ஆயிரத்திற்கும் குறைவான புலிகள் இந்தியப்படைகளிற்கும் அதன் தளபதிகளிற்கும் பல தடவைகள் சாவுப் பயத்தைக் காட்டி, வீரவரலாறு ஒன்றை பதிந்தார்கள்.
அவமானப்பட்டு வாழ்வதைவிட போராடிச் சாவதே மேல் என்னும் தம் தாரக மந்திரத்தை இறுதிவரை கடைப்பிடித்தவர்கள் புலிகள்.
அன்பரசன் நடராஜா